Monday, September 20, 2010

வணக்கம் நண்பர்களே!

நீண்ட நாட்களாக சிந்தனையில் இருந்த விசயம் இது!, எந்த ஒரு விசயத்தையும் நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதிலேயே அதன் பயன்பாடு முழுமையடைகிறது!,

இந்த தளத்தில் நீங்கள் எதை வாங்க விரும்பினாலும், விற்க விரும்பினாலும் தெரியப்படுத்தலாம்!
தற்பொழுது வேண்டுகோள்கள் இலவசமாக வெளியிடப்படும், உங்களது தேவைக்கான பொருள் வைத்திருப்பவர் அல்லது உங்களிடம் வாங்க விருப்புவர்களை நிபந்தனையின் பேரில் நேரடியாக தொடர்பு கொள்ள வைக்கப்படும்!

தற்பொழுது ப்ளாக்காக ஆரம்பிக்கபட்டிருக்கும் இது பின்னாளில் கமர்சியல் தளமாக மாற்ற ஆசை!

சமூகத்தில் ஏற்று கொள்ளப்பட்ட எதை வேண்டுமானாலும் வாங்க விற்க இங்கே விளம்பரப்படுத்தலாம்!
உபயோகபடுத்திய எதுவாகினும், என்ன நிலையில் இருந்தாலும், உங்களின் விலை எதிர்பார்ப்பை தெரிவித்து!

சுருக்கமாக சொல்லனும் என்றால் குண்டூசியில் இருந்து விமானம் வரை!

உங்கள் ஆதரவை என்றும் எதிர்பார்க்கும்


-வால்

24 comments:

  1. நல்ல யோசனை.

    கமிஷன் பெர்சண்டேஜ் எவ்வளவு..?

    ReplyDelete
  2. வாழ்த்துகள் நண்பரே!

    ஆனால் பிளாகர் இந்த முயற்சிக்கு சரியான தளமா என்று தெரியவில்லை....


    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

    ReplyDelete
  3. இது ஒரு நல்ல முயற்சி ... கண்டிப்பாக என் ஆதரவும் உண்டு ...
    வாழ்த்துக்கள் அருண் ...

    ReplyDelete
  4. நல்ல முயற்சி வாலு..!

    எனக்கு குறைந்த விலையில் ஒரு லேப்டாப் வாங்கிக் கொடு ராசா..!

    ReplyDelete
  5. அருமையான முயற்சி ! ப்ளாக்கரில் சாத்தியமாகுமா என்று தெரியவில்லை .தமிழில் ஒரு ஈ பே (ebay ) போல உருவாகி வளர்ந்திட ...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. //பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...
    y moderation??????????????????//

    விளம்பரதாரர்களின் தனிபட்ட விசயங்கள்(போன் நம்பர் போன்றவைகள்) மட்டுறுத்தப்பட வேண்டியதன் பொருட்டு!

    ReplyDelete
  7. தலை, விசிட்டிங் கார்டு முதல் புத்தகம் அச்சுக் கோக்கும் வரை வடிவமைத்துத் தரப்படும். அனுகவும். விஜய்கோபால்சாமி.

    ReplyDelete
  8. பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வால்பையனின் மேலும் ஒரு புதிய பரிமாணத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாழ்த்துகள் தல..

    ReplyDelete
  11. நான் இங்க வரலாமா!?

    ReplyDelete
  12. என்னிடம் ஒரு எலிக்கடிச்ச ஜட்டி ஒன்னுதான் விக்கிறதுக்கு இருக்கு! அதை வாங்க யாரும் ரெடியா இருந்தா சொல்ல சொல்லுங்க சொல்லுங்க:))

    ஐஸ் கடிச்ச ஆப்பிள் மாதிரி ஏலம் விட்டக்கூட எனக்கு ஓக்கே தான்! உங்களுக்கு 75% கமிசன் கொடுக்க கூட ரெடி!

    எனிவே வாழ்த்துக்கள் வால்!

    ReplyDelete
  13. //.. ராஜன் said...

    நான் இங்க வரலாமா!? ..//

    இங்க பெட்ரோமேக்ஸ் லைட் விக்கறது இல்லைங்க..

    ReplyDelete
  14. நல்ல விடயம் வால்,

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. நல்ல விஷயம், இந்த ப்ளாக்லேயே, மணமகன்(ள்) தேவை சேர்த்துக்கலாமே

    ReplyDelete
  16. தல இந்த ப்ளாக் என் ப்ளாக் கலர் டெம்ப்ளேட் மாதிரியே இருக்கு. என்ன ஒற்றுமை?

    ReplyDelete
  17. யாராவது நல்ல புத்தகங்கள் படிச்சு முடிச்சுட்டு வைச்சுருந்தா ஒரு ரேட் போட்டு சொல்லுங்கப்பா.

    ReplyDelete
  18. வாழ்த்துகள் வால்

    "குண்டூசியில் இருந்து விமானம் வரை"

    புலி தோல் - 2
    யானை தந்தம் - 4 ஜோடி
    எராயினு - கால் கிலோ
    சந்தன மரம் - 1 லோடு

    :-)))

    ReplyDelete
  19. காசே தான் கடவுளடா !!! வாழ்த்துக்கள்

    ReplyDelete